ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

துல்கர் சல்மான் - பூஜா ஹெக்டே திரைப்படத்தின் அப்டேட்!

துல்கர் சல்மான் - 41 திரைப்படத்தின் அப்டேட்...

துல்கர் சல்மான் - பூஜா ஹெக்டே

Published On :9 ஜூலை 2026, 12:40 pm IST

நடிகர் துல்கர் சல்மானின் 41-வது திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

தென்னிந்திய அளவில் பிரபலமான துல்கர் சல்மான் நடிப்பில் ஓணம் வெளியீடாக ஐயம் கேம் திரைப்படம் வெளியாகிறது. மேலும், இயக்குநர் பவன் சதினேனி இயக்கத்தில் நேரடி தெலுங்கு படமான ’ஆகாசம்லோ ஒக தாரா’ (வானத்தில் ஒரு நட்சத்திரம்) படத்திலும் துல்கர் சல்மான் நடித்து வருகிறார். இதற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

அதே நேரம், துல்கர் சல்மான் தன் 41-வது படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். ரவி நெலகுதிதி இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தில் உள்ளது. இதில், நடிகை பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்க இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீ லட்சுமி வெங்கடேஷ்வரா சினிமாஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.

Story image

இப்படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமத்தை அமேசான் பிரைம் நிறுவனம் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இதன் முதல் தோற்ற போஸ்டரை நாளை (ஜூலை 10) காலை 10.08 மணிக்கு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

An update on actor Dulquer Salmaan's 41st film has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.