ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தேசிய விருதுகள் பெற்ற அமரன் படக்குழுவுக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து!

தேசிய விருதுகள் பெற்ற அமரன் படக்குழுவுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்துள்ளது பற்றி...

Actor Sivakarthikeyan

நடிகர் சிவகார்த்திகேயன் - கோப்புப் படம்

Published On :18 ஜூலை 2026, 8:43 pm IST

தேசிய விருதுகள் பெற்ற அமரன் படக்குழுவுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

72 வது தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்த் திரைப்படங்களுக்கான விருதுகள் பட்டியலில் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படத்துக்கு 3 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

அமரன் குடும்பத்துக்கே இது ஒரு சிறந்த நாளாக அமைந்துள்ளது. சிறந்த இயக்குநர் விருது பெற்ற ராஜ்குமார் பெரியசாமிக்கும் சிறந்த பின்னணி இசைக்கான விருது ஜி.வி.பிரகாஷ் குமாருக்கும் சிறந்த படத்தொகுப்புக்கான விருது ஆர். கலைவண்ணனுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். மற்ற படக்குழுவினருக்கும் வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டுக்காக அறிவிக்கப்பட்ட இந்த தேசிய விருதுகளில் தமிழ்த் திரைப்படங்களுக்கு 9 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Actor Sivakarthikeyan has congratulated the team of the National Award-winning film Amaran.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.