
அன்பே டயானா படக்குழுவுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டு!
அன்பே டயானா படக்குழுவுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டு...

அன்பே டயானா படக்குழுவைப் பாராட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்... - Instagram/million dollars
இயக்குநர் பாரி இளவழகனின் “அன்பே டயானா” திரைப்படக்குழுவை நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டியுள்ளார்.
ஜமா திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் பாரி இளவழகன் இயக்கி நாயகனாக நடித்துள்ள புதிய படம் “அன்பே டயானா”.
மில்லியன் டாலர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் நாளை (ஜூலை 17) திரையரங்குகளில் வெளியாகின்றது. மேலும், இந்தப் படத்துக்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், அன்பே டயானா திரைப்படத்தை இன்று பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன் படக்குழுவைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுபற்றி, படக்குழு வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில்,
“நீங்கள் உயர்வாகக் கருதும் ஒருவரிடமிருந்து மனமார்ந்த பாராட்டைப் பெறுவதை விடச் சிறந்த வெகுமதி வேறு எதுவும் இல்லை” எனக் கூறப்பட்டுள்ளது.
நடிகர்கள் ரம்யா ரங்கநாதன், சேத்தன், ரோஜா, பரிதாபங்கள் கோபி உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சென்னை பெரம்பூரில் நடக்கும் காதல் கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளது.
Summary
Actor Sivakarthikeyan has appreciated the team behind Director Pari Ilavazhagan's film "Anbe Diana".
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






