ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பெரம்பூர் மக்கள் காலத்திற்கும் நினைக்கும் திரைப்படம்... அன்பே டயானா குறித்து இயக்குநர்!

இயக்குநர் பாரி இளவழகன் இயக்கிய அன்பே டயானா குறித்து...

இயக்குநர் பாரி இளவழகன்

Published On :12 ஜூலை 2026, 4:41 pm IST

இயக்குநர், நடிகர் பாரி இளவழகன் அன்பே டயானா குறித்து பேசியுள்ளார்.

தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வியலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஜமா திரைப்படம் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் பாரி இளவழகன். பாரி இளவழகனின் முதல் படமான ஜமாவில் அவரே நாயகனாக நடித்து இயக்கியும் இருந்தார்.

அடுத்ததாக, தானே இயக்கி, நடித்த அன்பே டயானா திரைப்படமும் விரைவில் வெளியாகிறது. இதனை மில்லியன் டாலர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த நிலையில், இதன் டிரைலர் வெளியீட்டு நிகழ்வில் பேசிய இயக்குநர் பாரி இளவழகன், “ஜமா திரைப்படம் முடிந்ததும் அன்பே டயானா கதையைத் தயாரிப்பாளர்களிடம் சொன்ன போது, வேறு ஹீரோவை வைத்து நீங்கள் இயக்குங்கள் என்றனர். நான் சினிமாவுக்கு நடிக்க வந்தவன் என்பதால் நான் நடிக்கவே திட்டமிட்டிருந்தேன். மில்லியன் டாலரிடம் கதை சொன்னதும் அதன் தயாரிப்பாளர் யுவராஜ் உடனே நீங்களே நடிங்க என்றார்.

பெரம்பூர் மக்கள் காலத்திற்கும் நினைக்கும் திரைப்படமாக அன்பே டயானா இருக்கும். என் முதல் திரைப்படத்தை மக்கள் பார்க்கவில்லை. இந்த திரைப்படத்தை தயவுசெய்து பாருங்கள். இது வணிக வெற்றியைப் பெற்றால் இன்னும் இதுபோன்ற திரைப்படங்கள் உருவாகும்” எனத் தெரிவித்துள்ளார்.

Director and actor Pari Ilavazhagan has spoken about Anbe Diana

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.