ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஜப்பானில் தோல்வியடைந்த துரந்தர் திரைப்படம்?

ஜப்பானில் வெளியான துரந்தர் குறித்து...

Dhurandhar

துரந்தர் போஸ்டர் - X | Jio Studios

Published On :15 ஜூலை 2026, 1:43 pm IST

நடிகர் ரன்வீர் சிங்கின் துரந்தர் திரைப்படம் ஜப்பானில் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.

ஆதித்யா தார் இயக்கத்தில் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் உருவான துரந்தர் - 2 திரைப்படம் உலகம் முழுவதும் கடந்த மார்ச் 19 அன்று தேதி திரையரங்குகளில் வெளியானது.

இப்படத்தின் முதல் பாகம் ஹிந்தி மொழியில் மட்டும் வெளியாகி ரூ.1,300 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இதனைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி 2,000 கோடி வசூலைத் தொட்டது.

தொடர்ந்து, ஜூலை 10 ஆம் தேதி ஜப்பானில் 80 திரையரங்குகளில் துரந்தர் வெளியானது. ஆனால், இப்படத்துடன் ரசிகர்களால் ஒன்ற முடியாததால் டிக்கெட் விற்பனையில் மந்தம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதன் காரணமாக, ஜப்பானில் துரந்தர் தோல்விப்படமாகலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் இந்திய திரைப்படங்களான இயக்குநர் ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் ரூ. 140 கோடி, நடிகர் ரஜினிகாந்த்தின் முத்து திரைப்படம் ரூ. 23 கோடி, பாகுபலி ரூ. 17 கோடி வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Actor Ranveer Singh's film Durandhar did not receive the expected reception in Japan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.