ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

அல்லு அர்ஜுனை இயக்கும் பாசில் ஜோசஃப்!

அல்லு அர்ஜுன் - பாசில் ஜோசஃப் கூட்டணியில் புதிய திரைப்படம்...

Basil joseph, allu arjun makes new super hero film

பாசில் ஜோசப், அல்லு அர்ஜுன். - கோப்புப் படங்கள்.

Published On :15 ஜூலை 2026, 12:55 pm IST

இயக்குநர் பாசில் ஜோசஃப் நடிகர் அல்லு அர்ஜுன் கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாகிறது.

தெலுங்கின் முன்னணி நடிகராக நடித்து வந்த அல்லு அர்ஜுனுக்கு புஷ்பா திரைப்படம் மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்த்தைக் கொடுத்தது. தொடர்ந்து வெளியான புஷ்பா - 2 ரூ. 2 ஆயிரம் கோடி வரை வசூலித்து வணிக ரீதியாகவும் அல்லு அர்ஜுனை உச்சத்திற்குக் கொண்டு சென்றிருக்கிறது.

தற்போதைய நிலவரப்படி, ரூ. 300 கோடி சம்பளம் வாங்கும் நடிகராக அல்லு அர்ஜுன் வளர்ந்துள்ளார். புஷ்பா - 2 திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் அட்லி இயக்கத்தில் தன் 22-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறார். இதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், இயக்குநரும் நடிகருமான பாசில் ஜோசஃப் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது. இன்ஸ்டாவில் ஐகான் எனப் பெயரிட்ட தொப்பியைப் பகிர்ந்து பாசில் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இது, மின்னல் முரளி போன்ற திரைப்படமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

A new film is being made featuring the collaboration of director Basil Joseph and actor Allu Arjun.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.