
இறுதிச் சடங்குகளில் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும் : மஞ்சு வாரியர்
இறுதிச் சடங்குகளில் கண்ணியத்தைப் பேண வேண்டுமென மஞ்சு வாரியர் கூறியுள்ளார்....

நடிகை மஞ்சு வாரியர் - படம்: இன்ஸ்டா / மஞ்சு வாரியர்
நடிகை மஞ்சு வாரியர் இறுதிச் சடங்குகளில் பங்கேற்போர் குறித்து பேசியுள்ளார்.
2015க்குப் பிறகு மீண்டும் நடிக்க துவங்கியிருக்கும் மஞ்சு வாரியருக்கு பிருத்விராஜுன் லூசிஃபர் திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைக் கொடுத்தது.
தமிழில் அசுரன் படத்தில் நடித்து பிரபலமானார். தொடர்ந்து அஜித்துடன் துணிவு படத்தில் நடித்தார். மேலும், வேட்டையன் படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கும் விடுதலை திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கும் மனைவியாக நடித்து கவனம் ஈர்த்தார்.
தற்போது, சில திரைப்படங்களில் மஞ்சு வாரியர் நடித்து வருகிறார். இந்த நிலையில், இறுதிச்சடங்குகளில் பங்கேற்போர் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டுமென அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த மஞ்சு வாரியர், ”ஒருவரின் மறைந்ததும் நடக்கும் இறுதிச்சடங்குகளில் கண்ணியம் தேவை. அண்மையில் மறைந்த நடிகர் சலீம் குமார், இயக்குநர் பாக்யராஜ் சடங்குகளில் தனிமனித உணர்வுகளை மதிக்காமல் சிலர் நடந்துகொண்டது வருத்தத்தை அளித்தது. சோகமான நேரத்தில்கூட ஒருவருக்கு ஒருவர் இடைவெளியைப் பேணாமலும் புகைப்படம் எடுத்துக்கொண்டும் இருப்பது பொது சிந்தனை இல்லாததையே காட்டுகிறது. இறுதிச்சடங்குகளில் கண்ணியமாக நடந்துகொள்ளுங்கள்” என்றார்.
Manju Warrier has spoken about those attending the funeral rites.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







