ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மொத ராத்திரியில் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளேன்: அனிஷ்மா அனில்குமார்

மொத ராத்திரி திரைப்படம் குறித்து அனிஷ்மா அனில்குமார்...

அனிஷ்மா அனில்குமார்

Published On :18 ஆகஸ்ட் 2026, 3:24 pm IST

நடிகை அனிஷ்மா அனில்குமார் மொத ராத்திரி திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.

‘சிறை’ மற்றும் ‘யூத்’ ஆகிய படங்களில் தனது நடிப்புக்காக பாராட்டுகளைப் பெற்றுள்ள அனிஷ்மா அனில்குமார் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர். ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிப்பதைத் தவிர்த்து, மாறுபட்ட கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து கவனம் ஈர்த்து வருகிறார். தற்போது வெளியாகவுள்ள, ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் மூலம் முதிர்ச்சியான பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தனது கதாபாத்திரம் குறித்து நடிகை அனிஷ்மா அனில்குமார் பேசும்போது, “‘மொத ராத்திரி’ திரைப்படத்தில் எனது கதாபாத்திரத்தின் உணர்வுப்பூர்வமான தன்மைதான் என்னை மிகவும் கவர்ந்தது. என்னுடைய கதாபாத்திரம் தனக்குள் நிறைய எண்ணங்களையும் உணர்வுகளையும் சுமந்து கொண்டிருந்தாலும் அவற்றை எல்லாம் வெளிப்படையாக சொல்லக்கூடிய ஒரு பெண் அல்ல. இப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடிப்பதில் அழகு இருப்பதாக நான் உணர்கிறேன். குறிப்பாக, பெண்கள் பல நேரங்களில் ஒரே சமயத்தில் பல்வேறு உணர்வுகளை அனுபவிப்பார்கள். அதிலும், அவர்கள் முற்றிலும் புதிதான ஒரு சூழ்நிலையில் இருக்கும்போது அந்த உணர்வுகள் இன்னும் அதிகமாக இருக்கும். அதனால், வழக்கமான கதாநாயகி கதாபாத்திரமாக அவரை சித்தரிக்காமல், உண்மைத்தன்மையுடன் அணுக வேண்டும் என்று விரும்பினேன்.

ஒரு நடிகையாக என்னுடைய முதிர்ச்சியான பக்கத்தை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை இந்தப் படம் எனக்கு வழங்கியுள்ளது. கதையில் நகைச்சுவையும் பொழுதுபோக்கு அம்சங்களும் இருக்கின்றன. ஆனால், அந்தச் சூழ்நிலையில் மிகவும் உண்மையான உணர்வுகள் இருக்கின்றன. குறிப்பாக, ஒரு பெண் தனது வாழ்க்கையின் புதிய கட்டத்திற்குள் நுழையும்போது ஏற்படக்கூடிய எதிர்பார்ப்புகள், பதற்றம் மற்றும் பல்வேறு சந்தேகங்கள் போன்ற உணர்வுகள் இதில் இருக்கின்றன.

இந்தக் கதாபாத்திரத்தை நடிக்க எனக்கு வாய்ப்பளித்த ராஜாவுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் நன்றி. கதாநாயகன் ரிஷிகாந்தும் சிறப்பாக நடித்துள்ளார். எங்களது கதாபாத்திரங்களுடன் நிச்சயம் பார்வையாளர்கள் தங்களைப் பொருத்தி பார்ப்பார்கள் என நம்புகிறேன்” என்றார்.

Actress Anishma Anilkumar has spoken about the movie Modha Rathiri.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.