ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

இசையமைப்பாளரான இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் சகோதரர்!

ஆதிக் ரவிச்சந்திரன் சகோதரர் குறித்து...

ஆதிக் ரவிச்சந்திரன் தன் சகோதரர் மனு ரவிச்சந்திரன்

Published On :7 ஜூலை 2026, 2:57 pm IST

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் சகோதரர் இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளார்.

த்ரிஷா இல்லன்னா நயன்தாரா திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். தொடர்ந்து, நடிகர் சிம்புவை வைத்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை இயக்கினார். அப்படம் தோல்விப்படமானது. பின், இடைவெளிவிட்டு நடிகர்கள் விஷால், எஸ்ஜே சூர்யாவை வைத்து, ‘மார்க் ஆண்டனி’ படத்தை இயக்கினார். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று ரூ. 100 கோடி வசூலித்து வெற்றிப்படமானது.

அடுத்ததாக, நடிகர் அஜித் குமாரை வைத்து, ‘குட் பேட் அக்லி’ என்கிற திரைப்படத்தை ஆதிக் இயக்கினார். இப்படம் பெரிய வரவேற்பைப் பெற்று, ரூ. 250 கோடி வரை வசூலித்து ஆச்சரியப்படுத்தியது. தற்போது, அஜித்தின் 64-வது படத்தையும் ஆதிக் இயக்கவுள்ளார்.

இந்த நிலையில், ஆதிக்கின் சகோதரர் மனு ரவிச்சந்திரன் ரேனிகுண்டா - 2 திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளார். தன் சகோதரர் திரைத்துறைக்கு அறிமுகமாகவுள்ளதை மகிழ்ச்சியுடன் புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளார்.

Director Adhik Ravichandran's brother is set to make his debut as a music composer.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.