
கேத்தன் கொலையில் திடீர் திருப்பம்! சியா திட்டம் பற்றி ஏற்கெனவே அறிந்திருந்த சகோதரர்?
கேத்தன் கொலையில் திடீர் திருப்பமாக சியா திட்டம் பற்றி ஏற்கெனவே சகோதரருக்கு தெரிந்திருந்ததா என்பது குறித்து..

கேத்தன் - சியா - file photo
புனே தொழிலதிபர் கேத்தன் கொலையில் திடீர் திருப்பமாக, குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் சியாவின் சகோதரர் சாஹில் கோயலுக்கு, கொலைத் திட்டம் பற்றி முன்பே தெரிந்திருந்ததாகத் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சியா சகோதரர் சாஹில் கோயலிடம் காவல்துறையினர் 10 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்திய நிலையில், அவருக்கு சியா - சேத்தன் காதல் விவகாரம் தெரிந்திருந்தும், தங்களது பெற்றோரிடம்தெரிவிக்காதது சந்தேகத்தை வலுப்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.
எனினும், கேத்தனின் சகோதரியை சாஹில் திருமணம் செய்யவிருந்ததாக வந்த தகவல்களில் உண்மையில்லை என்பது தெரிய வந்துள்ளது.
ஆனால், சாஹில் செய்தியாளர்களிடம் கூறுகையில், சியா, சேத்தனுடன் திருமணம் செய்ய விரும்பவில்லை, கேத்தனை திருமணம் செய்து கொள்வேன் என்று தன்னிடம் கூறியதாகக் குறிப்பிட்டிருந்தார். தற்போது வெளியாகும் தகவல்கள் வேறுமாதிரி உள்ளன.
நாங்கள் நண்பர்கள்தான் என்று சியா என்னை சமாதானம் செய்ததால்தான், இவர்கள் பற்றி பெற்றோரிடம் கூறவில்லை என்றும், கேத்தனை திருமணம் செய்து கொள்வேன், அதன்பிறகு சேத்தனுடன் பழக மாட்டேன் என்று என்னிடம் சத்தியம் செய்திருந்தார் என்றும் சாஹில் கூறியதாகத் தகவல்கள் வெளியாகின.
ஆனால், காவல்துறை நடத்திய விசாரணையில், சியா ஒருபோதும் கேத்தனை திருமணம் செய்ய சம்மதிக்கவில்லை, இது பற்றி சாஹிலிடம் கூறியிருக்க வாய்ப்பிருப்பதாகவே காவல்துறை நம்புகிறது. சியா - சேத்தன் தொடர்பு பற்றி அறிந்தும்கூட, அவர் இதுபற்றி யாரிடமும் வாய் திறக்கவில்லை. இதனால் அவர் மீது சந்தேகம் எழுவதாகவும் காவல்துறை கூறுகிறது.
மேலும், சேத்தனுடனான நட்பு குறித்து சியாவுக்கு சில குழப்பங்கள் இருந்தன. அவருடன் இருக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால், இது எந்தமாதிரியான உறவு என்பது புரியவில்லை என்று சியா கூறி வந்ததாகவும், ஆனால் கேத்தனுடன் திருமணத்துக்கு அனைத்து ஏற்பாடுகளையும் மகிழ்ச்சியாக செய்து வந்ததாகவும் கூறுகிறார் சாஹில்.
திருமணத்துக்கு முன்பு, போட்டோ ஷுட் எடுக்க சியாவை, சாஹில் வலுக்கட்டாயமாகத்தான் காருக்குள் ஏற்றி அனுப்பியதாக சந்தேகம் வந்த நிலையில் கார் ஓட்டுநரிடம் விசாரணை நடைபெறுகிறது. மேலும், பாலி பயணத்துக்கு முன்பு, கேத்தனின் பாஸ்போர்ட் கிழிக்கப்பட்டதில் சாஹில் தொடர்பு இருக்கலாமா என்ற சந்தேகமும் வலுவடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
Summary
Sudden twist in the Ketan murder case! Did the brother already know about Sia's plan?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





