ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

12த் பெயில் நாயகனின் புதிய இணையத் தொடர்! வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

நடிகர் விக்ராந்த் மாஸேவின் புதிய இணையத் தொடரின் வெளியீடு குறித்து...

Musafir Cafe

முசாஃபிர் கஃபே டீசரில்... - Youtube

Published On :1 ஜூலை 2026, 6:36 pm IST

நடிகர் விக்ராந்த் மாஸே நாயகனாக நடித்துள்ள “முசாஃபிர் கஃபே” இணையத் தொடரின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் விது வினோத் சோப்ரா இயக்கத்தில் உருவான 12த் பெயில் திரைப்படத்தில் நாயகனாக நடித்ததன் மூலம் மொழிகளைக் கடந்து பிரபலமாக அறியப்படுபவர் நடிகர் விக்ராந்த் மாஸே.

மேலும், அந்த படத்திற்காக நடிகர் விக்ராந்த் மாஸேவுக்கு கடந்த 2025 ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருது இந்திய அரசின் சார்பில் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், இயக்குநர் ருசீர் அருண் இயக்கியுள்ள “முசாஃபீர் கஃபே” எனும் இணையத் தொடரில் நடிகர் விக்ராந்த் மாஸே நாயகனாக நடித்துள்ளார்.

காதல் கதைகளத்துடன் உருவாகியுள்ள இந்த இணையத் தொடர் எழுத்தாளர் திவ்ய பிரகாஷ் துபே எழுதிய முசாஃபீர் கஃபே எனும் நாவலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.

நடிகர்கள் வேதிகா பிண்டோ மற்றும் மஹிமா மக்வானா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த இணையத் தொடர் வரும் ஜூலை 24 ஆம் தேதி முதல் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிப்பரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Summary

The release date for the web series "Musafir Cafe," starring actor Vikrant Massey, has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.