ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

யோகலட்சுமியின் புதிய இணையத் தொடர்! வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

தி கோர்ட் இணையத் தொடரின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது தொடர்பாக...

Published On :17 ஆகஸ்ட் 2026, 4:16 pm IST

ஹார்ட் பீட் இணையத் தொடரில் நடித்து பிரபலமடைந்த நடிகை யோகலட்சுமி, தி கோர்ட் என்ற புதிய இணையத் தொடரில் நடிக்கிறார்.

ஹார்ட் பீட் தொடரின் முதல் இரண்டு பாகங்களில் தேஜு பாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை யோகலட்சுமி. இந்தத் தொடரில் தன்னுடைய துணிச்சலான மற்றும் தனித்துவமான நடிப்பால் மக்களிடையே பிரபலமானார்.

இதன்மூலம், இவருக்கு டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, சிலம்பரசனின் அரசன் படத்திலும் யோகலட்சுமி நடித்து வருகிறார்.

இந்த நிலையில், நடிகை யோகலட்சுமி, தி கோர்ட் என்ற இணையத் தொடரில் பிரதான பிரதான பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இந்தத் தொடரில் ஜெயபிரகாஷ், சஞ்சனா திவாரி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

திக்குவாய் குறைபாடுள்ள திறமையான வழக்குரைஞர்(யோகலட்சுமி), நீதிக்காகப் போராடுவதே இந்தத் தொடரின் கதை.

யோகலட்சுமி, தனது தந்தைக்கு எதிராகவே நீதிமன்றத்தில் வாதாட வேண்டிய சூழல் ஏற்படுகிறது. தந்தைக்கும் மகளுக்குமான நீதிமன்றத்தில் நடக்கும் வாதங்களை மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்படுகிறது.

தி கோர்ட் இணையத் தொடர் வரும் செப். 4 ஆம் தேதி முதல் ஜியோ ஹாட் ஸ்டாரில் வெளியாகிறது.

Summary

The Court is set to premiere on JioHotstar from September 4.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.