தனுஷின் தேரே இஷ்க் மெய்ன்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!
தேரே இஷ்க் மெய்ன் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி தொடர்பாக...


நடிகர் தனுஷின் தேரே இஷ்க் மெய்ன் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் தனுஷ், க்ரித்தி சனோன் நடிப்பில் நேரடியாக ஹிந்தியில் உருவான தேரே இஷ்க் மெய்ன் திரைப்படத்தை ஆனந்த் எல். ராய் இயக்கியிருந்தார்.

நவம்பர் இறுதியில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் காதல் காட்சிகள் மற்றும் ஏ. ஆர். ரஹ்மானின் பாடல்களால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது.
தமிழிலும் பலருக்கு இப்படம் பிடித்திருந்தாலும் சரியான புரோமோஷன் இல்லாததால் அதிக திரைகளில் வெளியாகவில்லை.
தேரே இஷ்க் மெய்ன் திரைப்படம் உலகளவில் ரூ. 152 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தேரே இஷ்க் மெய்ன் திரைப்படம் நாளை(ஜன. 23) நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...