/

கவனம் ஈர்க்கும் பூக்கி புரோமோ!

பூக்கி புரோமோ வெளியானது...

News image
Updated On :19 ஜனவரி 2026, 11:02 am

இணையதளச் செய்திப் பிரிவு

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தயாரிப்பில் உருவாகும் “பூக்கி” திரைப்படத்தின் புரோமோ வெளியாகியுள்ளது.

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் தயாரிப்பில் உருவாகும் புதிய படம் “பூக்கி”. இயக்குநர் கணேஷ் சந்திரா இயக்கும் இந்தப் படத்தின் மூலம் நடிகர் அஜய் திஷன் நாயகனாக அறிமுகமாகிறார். இவர் மார்கன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

மேலும், இதில் நடிகர்கள் தனுஷா, சுனில், பாண்டியராஜன் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும், விஜய் ஆண்டனி இசையமைக்கிறார்.

பிப். 13 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் புரோமோவை இன்று வெளியிட்டுள்ளனர். இதில், காதலர்களான அஜய் திஷன் மற்றும் தனுஷா காதலைக் கைவிட எடுப்பதற்கான முயற்சியில் இருக்கும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.