/

சுயமரியாதையை மட்டும் இழக்காதீர்கள்: ரவி மோகன்

சுயமரியாதை குறித்து ரவி மோகன்....

News image
Updated On :4 ஜனவரி 2026, 9:03 am

இணையதளச் செய்திப் பிரிவு

பராசக்தி இசை வெளியீட்டு நிகழ்வில் நடிகர் ரவி மோகன் சுய மரியாதை குறித்து பேசியுள்ளார்.

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா நடிப்பில் உருவான பராசக்தி திரைப்படத்தின் இசை வெளியீட்டு நேற்று நடைபெற்றது.

இதில், படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டு அனுபவங்களைப் பகிர்ந்தனர்.

அப்போது பேசிய நடிகர் ரவி மோகன், “பராசக்தி திரைப்படத்தில் நான் நடித்ததற்கு 2 முக்கியமான காரணங்கள் இருக்கின்றன. முதலில் இது சுயமரியாதையைப் பேசும் திரைப்படம். என் சொந்த வாழ்க்கையிலிருந்து சுயமரியாதை எவ்வளவு முக்கியம் எனக் கற்றுக்கொண்டேன்.

நீங்கள் யாரும் உங்கள் சுயமரியாதையை மட்டும் இழக்க வேண்டாம். இன்னொரு காரணம் இயக்குநர் சுதா கொங்கரா. இப்படம் பலரின் கடுமையான உழைப்பால் தங்கம் போல உருவாகியிருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.