ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள், இணையத் தொடர்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.
1ஹனி

தெலுங்கில் வெளியான திரில்லர் படமான ஹனி, தமிழில் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டு ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இந்தப் படத்தில் நவீன் சந்திரா, திவ்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
மதனப்பள்ளியில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள ஹனி திரைப்படம் சன் நெக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை(பிப். 27) வெளியாகிறது.
2தடயம்

சமுத்திரக்கனி
நடிகர் சமுத்திரக்கனி நடிப்பில் நவீன்குமார் பழனிவேல் இயக்கத்தில் உருவான தடயம் இணையத் தொடர், நாளை ஜீ5 ஓடிடியில் வெளியாகிறது.
தமிழ்நாடு – ஆந்திரப் பிரதேச எல்லைப் பகுதியில் 1999 ஆம் ஆண்டு நிகழ்ந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த இணையத் தொடர், கிரைம் திரில்லர் பாணியில் எடுக்கப்பட்டுள்ளது.
3ரோஸ்லின்

சுமேஷ் நந்தகுமார் இயக்கத்தில் விநாயக் சசிகுமார் திரைக்கதையில் உருவாகியுள்ள ரோஸ்லின் இணையத் தொடரை மேத்யூ ஜார்ஜ் தயாரித்துள்ளார்.
நடிகை மீனா பிரதான பாத்திரத்தில் நடித்துள்ள இந்த இணையத் தொடர், ஹாட் ஸ்டார் ஓடிடியில் நாளை வெளியாகிறது.
4நீலி ஹக்கி

கணேஷ் ஹெக்டே இயக்கத்தில் வெளியான நீலி ஹக்கி திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகவுள்ளது.
பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல விருதுகளை இப்படம் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
5அக்யூஸ்டு

கொங்கனா சென் சர்மா நடிப்பில் அனுபூதி காஷ்யப் இயக்கியத்தில் வெளியான படம் அக்யூஸ்டு.
அக்யூஸ்டு திரைப்படத்தை நாளை முதல் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணலாம்
6கடந்த வார ஓடிடி (சத்தா பச்சா)

இயக்குநர் அத்வைத் நாயர் இயக்கத்தில் வெளியான சத்தா பச்சா திரைப்படத்தில், நடிகர்கள் அசோகன், ரோஷன் மேத்யூ, விஷாக் நாயர் மற்றும் இஷான் சௌகத் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்தத் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் மலையாளம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் காணக் கிடைக்கிறது.
7ஹாட் ஸ்பாட் - 2

ஹாட் ஸ்பாட் படத்தின் முதல்பாகம் கடந்த 2024ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. முதல் பாகத்திற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார் விக்னேஷ் கார்த்திக்.
இந்தப் படத்தில், நடிகர்கள் அஷ்வின், எம்.எஸ்.பாஸ்கர், பிரியா பவானி சங்கர், ரக்ஷன், தம்பி ராமய்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹாட் ஸ்பாட் - 2 திரைப்படத்தை ஆஹா ஓடிடியில் பார்க்கலாம்.
8 லக்கி

நடிகர் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவான லக்கி திரைப்படத்தை ஜியோ ஹாட்ஸ் ஸ்டார் ஓடிடியில் பார்க்கலாம்.
வளர்ப்பு நாயை மையப்படுத்தி உருவான இப்படத்தில் அனஸ்வரா ராஜனும் முக்கிய கதாபாத்திரங்களில் மொட்டை ராஜேந்திரன், தம்பி ராமைய்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
9கென்னடி

இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் நடிகர் ராஹுல் பட் நாயகனாக நடித்து உருவான திரைப்படம் கென்னடி. கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியீட்டிற்குத் தயாரான இப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது.
இப்படம் நேரடியாக ஜீ5 ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
10 அமோஸ் அலெக்சாண்டர்

மலையாளத்தில் வெளியான கிரைம், திரில்லர் திரைப்படம் அமோஸ் அலெக்சாண்டர். இப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியானது.
இந்தத் திரைப்படத்தில் ஜாபர் இடுக்கி, அஜு வர்கீஸ், தாரா அமலா ஜோசப் மற்றும் கலாபவன் ஷாஜோன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
11ஒண்டிமுனியும் நல்லபாடனும்

கொங்கு வட்டாரத்தில் நிகழ்ந்த சம்பவங்களை மையப்படுத்தி ஒண்டிமுனியும் நல்லபாடனும் படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தை சுகவனம். ஆர் இயக்கியுள்ளார்.
முதன்மைக் கதாபாத்திரத்தில் பரோட்டா முருகேசன் நடித்துள்ளார். மேலும், கார்த்திகேசன், சித்ரா நாகராஜன், விஜயன் தியா, வித்யா சக்திவேல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை சன் நெக்ஸ் ஓடிடியில் காணலாம்.
Summary
You can see which movies and web series are releasing this week on OTT platforms.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் பல்வகைப் படங்கள்!

ஓடிடியில் தாய் கிழவி: இந்த வாரம் வெளியாகும் படங்கள்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


