/

அல்லு அர்ஜுனைச் சந்திக்க நிபந்தனைகள்? மறுப்பு தெரிவித்த நடிகர் தரப்பு!

அல்லு அர்ஜுன் தரப்பிலிருந்து புதிய அறிக்கை...

News image
நடிகர் அல்லு அர்ஜுன்
Updated On :11 பிப்ரவரி 2026, 7:28 am

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் அல்லு அர்ஜுன் தரப்பிலிருந்து புதிய அறிக்கை வெளியாகியுள்ளது.

நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பா திரைப்படத்திற்குப் பின் இயக்குநர் அட்லியுடன் இணைந்துள்ளார். ரூ. 600 கோடி பட்ஜெட்டில் மிகப் பிரம்மாண்டமான திரைப்படமாக இது உருவாகி வருகிறது.

இதனைத் தொடர்ந்து, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் நடிக்கிறார். இது, ரூ. 800 கோடியில் உருவாகிறதாம்.

இந்த நிலையில், அல்லு அர்ஜுனைச் சந்திக்கச் செல்பவர்கள் என்ன செய்ய வேண்டும்; செய்யக் கூடாது உள்பட 42 நிபந்தனைகள் கொண்ட அறிக்கை ஒன்று சமூக வலைதளங்களில் சுற்றலில் இருக்கிறது.

இதனால், அல்லு அர்ஜுனை விமர்சித்து பதிவுகள் வரத் தொடங்கின. இந்த நிலையில், அல்லு அர்ஜுன் தரப்பிலிருந்து புதிய அறிக்கை வெளியாகியுள்ளது.

Story image

அதில், “நடிகர் அல்லு அர்ஜுனைச் சுற்றி பரவும் வதந்திகள் முற்றிலும் போலியானவை. இதனைச் செய்பவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வோம். தயவுசெய்து போலியான தகவல்களிடமிருந்து அனைவரும் விலகி இருக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.