டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ஆவணப்படமாகும் ரஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமணம்?

ரஷ்மிகா திருமண நிகழ்வை ஆவணப்படமாக்கத் திட்டம்...

News image
ரஷ்மிகா - விஜய் தேவரகொண்டா
Updated On :10 பிப்ரவரி 2026, 9:04 am

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் விஜய் தேவரகொண்டா - ரஷ்மிகா மந்தனா திருமணம் ராஜஸ்தானில் நடைபெற உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ரஷ்மிகா மந்தனா இருவரும் நீண்ட காலமாக காதலித்து வருகின்றனர். அதனை இருவரும் பல்வேறு தருணங்களில் மறைமுகமாக ஒப்புக்கொள்ளவும் செய்தனர்.

தற்போது, இருவருக்கும் வருகிற பிப். 26 ஆம் தேதி ராஜஸ்தானில் உள்ள உதய்பூர் கோட்டையில் பிரம்மாண்டமாகத் திருமணம் நடக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், இந்தத் திருமண நிகழ்வை ஆவணப்படமாக்கி வெளியிட நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஏற்கனவே, நடிகைகள் நயன்தாரா, காஜல் அகர்வாலின் திருமண நிகழ்வுகள் ஆவணப்படமாக வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

summary

actors rashmika and vijay devarakonda marriage will be documentry by ott

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.