டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

உதய்பூர் மாளிகையில் ரஷ்மிகா - விஜய் தேவரகொண்டாவுக்கு திருமணம்?

நடிகை ரஷ்மிகா மந்தனா- நடிகர் விஜய் தேவரகொண்டாவின் திருமணம் குறித்து...

News image
ரஷ்மிகா மந்தனா, விஜய் தேவரகொண்டா.- படங்கள்: இன்ஸ்டா / ரஷ்மிகா மந்தனா, விஜய் தேவரகொண்டா.
Updated On :1 பிப்ரவரி 2026, 10:29 am

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகை ரஷ்மிகா மந்தனாவுக்கும் நடிகர் விஜய் தேவரகொண்டாவிற்கும் பிப்.26ஆம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளன.

இந்தத் திருமணம் உதய்பூரிலுள்ள பழம்பெருமையான மாளிகை ஒன்றில் நடக்கவிருப்பதாகவும் கூறப்படுகின்றன.

நடிகர் விஜய் தேவரகொண்டாவும் ரஷ்மிகாவும் நீண்டகாலமாக காதலித்து வரும்நிலையில், சமீபத்தில் நிச்சயதார்த்தமும் நடந்ததாகத் தெரிகிறது.

இவர்கள் இருவரும் இணைந்து கீதா கோவிந்தம் (2018), மை டியர் காம்ரேட் (2019) ஆகிய படங்களில் ஒன்றாக நடித்திருந்தார்கள். அடுத்ததாக, இந்தாண்டு செப்டம்பரில் வெளியாகவிருக்கும் ரணபலி எனும் படத்தில் ஒன்றாக நடித்துள்ளார்கள்.

இந்நிலையில், தங்களது திருமணத்துக்காக இருவரும் உதய்பூர் மாளிகைக்குச் சென்று பார்வையிட்டுள்ளதாக தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளன.

இருப்பினும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகாததும் கவனிக்கத்தக்கது.

summary

Rashmika Mandanna and Vijay Deverakonda are set to enter wedlock on February 26 in an iconic palace in Udaipur.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.