/

பவன் கல்யாணின் உஸ்தாத் பகத் சிங் வெளியீட்டுத் தேதி!

பவன் கல்யாணின் உஸ்தாத் பகத் சிங் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து...

News image
Updated On :4 பிப்ரவரி 2026, 12:58 pm

இணையதளச் செய்திப் பிரிவு

ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண் நாயகனாக நடிக்கும் “உஸ்தாத் பகத் சிங்” திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ஹரிஷ் சங்கர் இயக்கத்தில், ஆந்திர துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண் நாயகனாக நடித்துள்ள புதிய படம் “உஸ்தாத் பகத் சிங்”. இப்படத்தை, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகை ஸ்ரீ லீலா நாயகியாக நடித்துள்ளார். மேலும், பவன் கல்யாணின் அரசுப் பணிகளுக்கு இடையே இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், “உஸ்தாத் பகத் சிங்” திரைப்படம் வரும் மார்ச் 26 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

முன்னதாக, பவன் கல்யாண் நடிப்பில் வெளியான “ஓஜி” திரைப்படம் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.