
4 நாள்களில் ரூ. 100 கோடி வசூலித்த இருமுடி!
இருமுடி கட்டு திரைப்படத்தின் வசூல் நிலவரம் பற்றி...

இருமுடி படத்தில் ரவிதேஜா
ரவிதேஜா நடித்துள்ள இருமுடி கட்டு திரைப்படம் 4 நாள்களில் ரூ. 100 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.
இயக்குநர் சிவா நிர்வாணா இயக்கத்தில் நடிகர் ரவி தேஜா நடிப்பில் உருவான திரைப்படம் இருமுடி கட்டு.
வன்முறை வாழ்க்கை வாழ்ந்து குடிப்பழக்கத்துக்கு அடிமையான நாயகன் மகளின் விருப்பத்தின் பேரில் ஐயப்பனுக்கு மாலை போடுவதும், அதனால் அவரது வாழ்வில் ஏற்படும் நல்ல மாற்றங்களுமாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
மைத்ரி நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் பிரியா பவானி சங்கர் நாயகியாக நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் இப்படம் வெளியானது.
படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து, 4 நாள்களில் ரூ. 100 கோடி வசூலை இப்படம் கடந்து சாதனை படைத்துள்ளது.
ரவி தேஜாவுக்கு நீண்ட காலம் கழித்து வெற்றிப்படம் அமைந்துள்ளதால் அவரது ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இருமுடி படத்தில் ரவிதேஜா
Summary
Irumudi grosses Rs. 100 crore in 4 days!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







