ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பெத்லகேம் குடும்ப யூனிட் - 110 நாள்கள் நடைபெற்ற படப்பிடிப்பு!

பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படம் குறித்து...

Published On :16 ஆகஸ்ட் 2026, 5:59 pm IST

நடிகர்கள் நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் உருவான பெத்லேகம் குடும்ப யூனிட் திரைப்படம் ஓணம் வெளியீடாகத் திரைக்கு வருகிறது.

நடிகர் நிவின் பாலி நாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் “பெத்லகேம் குடும்ப யூனிட்”. ஃபகத் ஃபாசில், திலீஷ் போத்தன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் நடிகர்கள் மமிதா பைஜூ, ஷியாம், சங்கீத் பிரதாப், வினய் ஃபோர்ட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரேமலு பட இயக்குநர் கிரீஷ் ஏடி இயக்கியுள்ளார்.

இப்படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி வெளியாகவுள்ளது. டிரைலர் காட்சிகளும் கவனம் பெற்றுள்ளன.

இந்த நிலையில், இப்படம் ரூ. 30 கோடி பட்ஜெட்டில் 110 நாள்கள் படப்பிடிப்பு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். மலையாளப் படமொன்று இவ்வளவு நாள்கள் படமாக்கப்பட்டுள்ளதால் ரசிகர்களிடமும் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ஓணம் வெளியீட்டிற்கு ஏற்ற படமாக இருக்கும் என ரசிகர்கள் காத்திருப்பதால் முதல் நாள் வசூலாக பெரிய தொகையை வசூலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநாளில், பிருத்விராஜின் கலிஃபா திரைப்படமும் வெளியாகவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.