ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மோசமான விமர்சனங்கள்... தோல்விப்படமான விஷாலின் மகுடம்!

நடிகர் விஷாலின் மகுடம் திரைப்படம் குறித்து...

Published On :16 ஆகஸ்ட் 2026, 3:25 pm IST

நடிகர் விஷால் நடிப்பில் உருவான மகுடம் திரைப்படம் மோசமான விமர்சனங்களையே சந்தித்து வருகிறது.

சூப்பர் குட் பிலிம்ஸின் 99-வது படமாக உருவான 'மகுடம்’ திரைப்படத்தை முதலில் இயக்குநர் ரவி அரசு இயக்கினார். ஆனால், சில நாள்களிலேயே நடிகர் விஷாலுக்கும் அவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ரவி அரசு அப்படத்திலிருந்து விலக, விஷாலே இயக்குநர் பணியையும் மேற்கொண்டார்.

நாயகிகளாக துஷாரா விஜயன், அஞ்சலி ஆகியோர் நடித்ததால் கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. மேலும், தோற்ற போஸ்டர்களும் ஆவலை ஏற்படுத்தியதால் மகுடம் ஏமாற்றம் அளிக்காத ஜாலியான படமாக இருக்கும் என ரசிகர்கள் நினைத்தனர்.

ஆனால், வெள்ளிக்கிழமை வெளியான இப்படம் மோசமான விமர்சனங்களைப் பெற்று ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு காட்சிகூட ரசிக்கும் படியாக இல்லையென்றும், லாஜிக்கே இல்லாமல் தொடர்பில்லாத திரைக்கதையால் 3 மணிநேரத்திற்கும் மேலான திரைப்படம் சோர்வை அளிப்பதாகப் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும், இரண்டு நாள் வசூலாக இப்படம் ரூ. 1 கோடி மட்டுமே வசூலித்திருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், நடிகர் விஷாலின் மிக மோசமான திரைப்படமாக இதுவே இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

The film Magudam, starring actor Vishal, is facing poor reviews.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.