ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கடவுளின் குழந்தை நான்... நள்ளிரவில் பதிவிட்ட விஷால்!

நடிகர் விஷால் மகுடம் திரைப்படம் வெளியீட்டிற்கு முன்பு பகிர்ந்த பதிவு குறித்து...

Magudam movie poster.

மகுடம் திரைப்பட போஸ்டர். - படம்: எக்ஸ் / விஷால்.

Published On :14 ஆகஸ்ட் 2026, 5:53 pm IST

நடிகர் விஷால் மகுடம் திரைப்படம் வெளியீட்டிற்கு முன்பாக நள்ளிரவில் தனது எக்ஸ் பக்கத்தில், “கடவுளின் குழந்தை நான்” எனக் கூறியுள்ளார்.

சூப்பர் குட் பிலிம்ஸின் 99-வது படமாக உருவாகும் 'மகுடம்’ படத்தின் மூலம் நடிகர் விஷால் இயக்குநராக அறிமுகமாகிறார். இதில் துஷாரா விஜயன், அஞ்சலி, ஜான் விஜய் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

இப்படத்தில் விஷால் கேங்ஸ்டராக நடித்துள்ளார். இயக்குநராகும் தனது 30 ஆண்டுகால கனவு இப்படத்தின் மூலம் நிறைவேறியதாக விஷால் முன்னதாகக் கூறியிருந்தார்.

இந்தப் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள நிலையில் இன்று (ஆக.14 ) திரையரங்குகளில் வெளியானது. இது குறித்து நள்ளிரவு 1.54 மணிக்கு விஷால் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

நான் விட்டுத்தர மாட்டேன். ஆமாம், நான் எப்போதுமே விட்டுத்தர மாட்டேன். நான் விஷால் ’கடவுளின் குழந்தை’. எவ்வளவு சவால் வருகிறதோ அவ்வளவு நான் உயர்வேன். ஏனெனில் நான் எப்போதும் தயக்கமோ அவமானமோ இன்றி நிலைக்கண்ணாடியைப் பார்ப்பேன். ஏனெனில், எனது வேலையை மன உறுதியுடன் நம்பிக்கையுடன் செய்வதால் அந்தப் பணி சற்று கூடுதல் சிறப்புடன் நடிகராக ரசிகர்களை திருப்திப்படுத்த எனது வேலையைச் செய்து முடிக்கிறது.

ரசிகர்களை நான் கடவுளுக்கு நிகராக மதிக்கிறேன். ஏனெனில் இன்று நான் திரைத்துறையிலும் சமூகத்திலும் இவ்வளவு பெரிய இடத்தில் இருக்க காரணமே அவர்கள்தான். மகுடம் என்ற படத்தின் மூலமாக இயக்குநராக வேண்டும் என்ற எனது 35 ஆண்டு கனவை உங்கள் முன் கொண்டு வந்திருக்கிறேன்.

கடந்த 14 மாதங்களாக நாங்கள் என்ன வேலை செய்தோம் என்பதை உங்களுக்குக் காட்ட காத்திருக்கிறோம். உலகம் முழுவதும் வெளியாகிறது. அனைவரும் வாருங்கள். உங்களை கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என்றார்.

Summary

Actor and Director Vishal pens emotional note on Magudam release: I am Gods Child

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.