ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பிய ஜூனியர் என்டிஆர்!

தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியது குறித்து...

Jr. NTR with hospital staff after the surgery.

அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனை ஊழியர்களுடன் ஜூனியர் என்டிஆர். - படம்: எக்ஸ் / கேஐஎம்எஸ் மருத்துவமனை

Published On :13 ஆகஸ்ட் 2026, 3:52 pm IST

தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் தனது தோள்பட்டை அறுவைச் சிகிச்சையை முடித்துவிட்டு செகந்திராபாத் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.

ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் என்.டி. ராமா ராவ்வின் பேரனும் தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகருமான ஜூனியர் என்டிஆர் பிஸியாக நடித்து வருகிறார்.

கேஜிஎஃப் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் டிராகன் எனும் படத்தில் ஜூனியர் என்டிஆர் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கு அடுத்ததாக த்ரிவிக்ரம் உடன் இணைந்து நடிக்கிறார்.

சமீபத்தில் அவருக்கு தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக செகந்திராபாதில் இருக்கும் கேஐஎம்எஸ் மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சைக்காக சேர்ந்தார்.

இந்த நிலையில், ஆர்த்ரோஸ்கோபிக் அறுவைச் சிகிச்சையை முடித்து வீடு திரும்பியதாக அவரும் மருத்துவமனை நிர்வாகமும் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “வியாழக்கிழமை, ஆக. 13, 2006: நடிகர் ஜூனியர் என்டிஆர் ஆர்த்ரோஸ்கோபிக் அறுவைச் சிகிச்சையை டாக்டர் பூர்ணாசந்திரா, டாக்டர் நிதின் தலைமையில் வெற்றிகரமாக முடித்து கேஐஎம்எஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்” எனக் கூறியிருந்தது.

மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் மருத்துவர்களுக்கும் ரசிகர்களுக்கும் ஜூனியர் என்டிஆர் நன்றி தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

Summary

Jr NTR discharged from hospital after successful shoulder surgery

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.