ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மீண்டும் இணையும் அஜித் குமார் - சிறுத்தை சிவா கூட்டணி?

நடிகர் அஜித் குமார் மீண்டும் இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

அஜித் குமார் - சிறுத்தை சிவா

Published On :15 ஆகஸ்ட் 2026, 5:13 pm IST

நடிகர் அஜித் குமார் மீண்டும் இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

நடிகர் அஜித் குமார் குட் பேட் அக்லி வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் மீண்டும் இணைகிறார்.

இப்படத்திற்கு டேர் டெவில் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் மூலம் நடிகையும், அஜித் குமாரின் மனைவியுமான ஷாலினி தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.

இதனைத் தொடர்ந்து, கிளாடியேட்டர்ஸ் என்ற படத்திலும் அஜித் நடிக்கிறார். அஜித்தின் ரேஸிங் வாழ்க்கை பற்றிய ஆவணப்படமாக உருவாகும் இதை இயக்குநர் விஜய் இயக்குகிறார்.

இதற்கு அடுத்ததாக, அஜித்தின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியைத் தந்த படமான மங்காத்தா-வின் இரண்டாவது பாகத்தில் அவர் நடிக்கவிருப்பதாகக் கூறப்பட்டது. அதேபோல, இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

ஆனால், வேல்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மீண்டும் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, டேர்டெவில்ஸ் படத்தை தயாரிக்கவிருந்த வேல்ஸ் நிறுவனம், அப்படத்தின் பட்ஜெட் காரணமாக விலகியது. இந்த நிலையில், சிவா இயக்கும் படத்திற்கான பட்ஜெட் அதைவிட குறைவானது என்பதால், தயாரிப்பு தரப்பில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐந்தாவது முறையாக அஜித் குமார் - சிறுத்தை சிவா கூட்டணி இணையவுள்ளதாக வெளியான செய்தி ரசிகர்களிடையே உற்சாத்தை ஏற்படுத்தியுள்ளது.

Summary

Reports have emerged that actor Ajith Kumar is set to act under the direction of Siva once again.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.