ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

யுவன் குரலில் சிக்மா படத்தின் லிரிக்கல் விடியோ!

ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள சிக்மா படத்தில் இருந்து யுவன் ஷங்கர் ராஜா பாடிய பாடல் குறித்து...

Sundeep Kishan, Faria Abdullah

சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா. - படங்கள்: யூடியூப் / சரிகம தமிழ்.

Published On :12 ஆகஸ்ட் 2026, 8:19 pm IST

ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள சிக்மா திரைப்படத்தில் இருந்து யுவன் ஷங்கர் ராஜா பாடிய பாடலின் லிரிக்கல் விடியோ வெளியாகியுள்ளது.

லைகா தயாரிப்பில் இயக்குநராக அறிமுகமாகும் முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்யின் சிக்மா படத்தில் சந்தீப் கிஷன் நாயகனாக நடிக்கிறார். ஃபரியா அப்துல்லா நாயகியாக நடிக்கிறார்.

இந்தப் படத்தில் ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், ஷிவ் பண்டிட், அன்பு தாசன், யோக் ஜபே, மகலட்சுமி, ஷீலா ராஜ்குமார், கமலேஷ், கிரண் கொண்டா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

பாடலாசரியர் விவேக் எழுதியுள்ள இந்தப் பாடலை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ளார். சமீபத்திய நேர்காணல் ஒன்றில் ஜேசன் சஞ்சய் தான் யுவனின் மிகத் தீவிரமான ரசிகர் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சிக்மா திரைப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாகக் கூறப்பட்டது. இந்தப் படம் கடந்த ஜூலையில் வரவிருந்தது பின்னர் ஒத்திவைக்கப்பட்டது.

இந்தப் படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

Summary

Lyrical video of Jason Sanjay's 'Sigma' featuring Yuvan's vocals!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.