ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நஸ்லன் - கும்பளங்கி நைட்ஸ் இயக்குநரின் புதிய திரைப்படம் தொடக்கம்!

நடிகர் நஸ்லனின் புதிய திரைப்படம் ஆரம்பம்...

Published On :6 ஆகஸ்ட் 2026, 11:31 am IST

கும்பளங்கி நைட்ஸ் திரைப்படத்தின் இயக்குநர் மது சி. நாராயணன் தன் அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார்.

திரை எழுத்தாளர் ஷ்யாம் புஷ்கரன் எழுத்தில் இயக்குநர் மது சி. நாராயணன் இயக்கத்தில் உருவாகி இந்தியளவில் பாராட்டுகளைப் பெற்ற திரைப்படம் கும்பளங்கி நைட்ஸ்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள சுற்றுலா கிராமமான கும்பளங்கி என்கிற பகுதியை மையமாக வைத்து அங்கு காதல், குடும்ப உறவுகளின் உன்னதமான பக்கங்களை வெளிக்கொண்டு வந்த படமாக உருவான இது மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் பலராலும் பாராட்டப்பட்டது. நடிகர்கள் ஃபஹத் ஃபாசில், சௌபின் சாகிர், ஷேன் நிகம், அன்னா பென் என பலருக்கும் அடுத்தகட்ட வளர்ச்சிக்கான படமாகவே அமைந்தது.

இயக்குநரும், நடிகருமான திலீஷ் போத்தன்

இயக்குநரும், நடிகருமான திலீஷ் போத்தன்

இப்படம் வெளியாகி 7 ஆண்டுகளாகியும் மது அடுத்த படத்தை இயக்காமல் இருந்தார். இந்த நிலையில், பிரேமலு, மாலிவுட் டைம்ஸ் திரைப்படங்கள் மூலம் பெரிதாக கவனிக்கப்பட்ட நடிகர் நஸ்லனை வைத்து புதிய படத்தை இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று கொச்சியில் தொடங்கியுள்ளது. இயக்குநரும், நடிகருமான திலீஷ் போத்தன் படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.