
வதந்தி சீசன் 2: டிரைலர் வெளியீட்டு விழாவில் கவனம் ஈர்த்த ரேவதி சர்மா!
வதந்தி சீசன் 2 இணையத் தொடரின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கவனம் பெற்ற நடிகை ரேவதி சர்மா குறித்து...

நடிகை ரேவதி சர்மா - படங்கள்: இன்ஸ்டா / mg_photography06
வதந்தி சீசன் 2 இணையத் தொடரின் டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகை ரேவதி சர்மாவின் க்யூட்டான புகைப்படங்கள், விடியோக்கள் கவனம் பெற்றன.
கேரளத்தைச் சேர்ந்த ரேவதி சர்மா சென்னையில் வசித்து வருகிறார். இங்கேயே வளர்ந்த அவர் முதல்முறையாக 2023ல் கௌதம் கார்த்திக்கின் ஆக.16, 1947 என்ற படத்தில் அறிமுகமானார்.
நடிகர் சூரியின் கருடன் திரைப்படத்தில் நாயகியாக நடித்த ரேவதி சர்மா தமிழ் ரசிகர்களிடையே மிகுந்த கவனம் பெற்றார். பின்னர், மலையாளத்திலும் நடித்து வருகிறார்.
கடைசியாக அவர் 2025ல் நடித்த தலவாரா (Thalavara) என்ற மலையாள திரைப்படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது, வதந்தி சீசன் 2 தொடரில் நடித்துள்ளார்.
இந்தத் தொடரில் சசிகுமார், எஸ். ஜே. சூர்யா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்தத் தொடரை ஆண்ட்ரூ லூயிஸ் எழுதி இயக்கியுள்ளார்.
8 எபிசோடுகள் கொண்ட இந்தத் தொடர் அமேசான் பிரைமில் தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் வரும் ஆக.7ஆம் தேதி வெளியாகிறது.
இதற்காக நடத்தப்பட்ட டிரைலர் வெளியீட்டு விழாவில் நிகழ்ச்சியில் நடிகை ரேவதி சர்மாவின் க்யூட்டான ரியாக்ஷன்களை ஒளிப்பதிவாளர்கள் பதிவுசெய்தார்கள். இந்தப் புகைப்படங்கள், விடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.
Summary
Vadhandhi Season 2: Revathi Sharma grabs attention at the trailer launch event!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






