ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சசிகுமாரின் வதந்தி - 2 டிரைலர்!

சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள வதந்தி - 2 இணையத் தொடரின் டிரைலர் வெளியாகியுள்ளது...

Vadhandhi Season 2 - Official Trailer

வதந்தி - 2 டிரைலரில் - யூடியூப்

Published On :31 ஜூலை 2026, 4:24 pm IST

நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள “வதந்தி 2” இணையத் தொடரின் டிரைலர் வெளியாகியுள்ளது.

விக்ரம் வேதா திரைப்பட இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரியின் தயாரிப்பில், நடிகர் எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான இணையத் தொடர் “வதந்தி”. இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கியிருந்த இந்தத் தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

இதையடுத்து, வதந்தி 2 இணையத் தொடரில் நடிகர் சசிகுமார் மூஸா ராஜா எனும் காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார். மேலும், இத்தொடரில் நடிகர்கள் அபர்னா தாஸ், விவேக் பிரசன்னா, அனகா, யஷ்வந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கியுள்ள “வதந்தி - தி மிஸ்டரி ஆஃப் மணி” இணையத் தொடரின் டிரைலரை படக்குழு இன்று (ஜூலை 31) வெளியிட்டுள்ளது.

கொலை வழக்கு விசாரணை கதைகளத்தில் உருவாகியுள்ள இந்த இணையத் தொடர் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வருகிற ஆக. 7 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் வெளியாகவுள்ளது.

Summary

The trailer for the web series "Vadhanthi 2," starring actor Sasikumar, has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.