ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

4 மாதங்களில் 13 கிலோ உடல் எடையைக் குறைத்த துஷாரா விஜயன்!

நடிகை துஷாரா விஜயன் நான்கு மாதங்களில் 13 கிலோ உடல் எடையைக் குறைத்தது குறித்து...

Actress Dushara Vijayan's weight loss photos.

நடிகை துஷாரா விஜயன் எடைக் குறைப்பு புகைப்படங்கள். - படங்கள்: இன்ஸ்டா / துஷாரா விஜயன்.

Published On :1 ஆகஸ்ட் 2026, 3:33 pm IST

நடிகை துஷாரா விஜயன் நான்கு மாதங்களில் 13 கிலோ உடல் எடையைக் குறைத்ததாக தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை படத்தில் மாரியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழக ரசிகர்களிடையே மிகப்பெரிய புகழினைப் பெற்றார்.

இந்தப் படத்துக்குப் பிறகு தனுஷுடன் ராயன், ரஜினியுடன் வேட்டையன் படங்களில் நடித்திருந்தார். சமீபத்தில் விக்ரமுடன் வீர தீர சூரன் படத்திலும் சிறப்பாக நடித்திருந்தார்.

குறிப்பாக ராயன் படத்தில் துஷாரா விஜயனின் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு பாராட்டும் கிடைத்தது. அந்தப் படம் தேசிய விருது பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

மலையாளத்தில் காட்டாளன் என்ற படத்திலும் அறிமுகமானார். மாதவன் உடன் ஜிடி நாயுடு படத்திலும் நடித்துள்ளார். தற்போது, ராஜு ஜெயமோகன் உடன் ஆல்மோஸ்ட் நல்லவன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

உடல்நலத்திலும் உடற்பயிற்சியில் அக்கறைக் கொண்ட துஷாரா விஜயன் சமீப காலமாக பாக்ஸிங் பயிற்சியிலும் கடுமையான உணவுக் கட்டுப்பாட்டிலும் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில், தனது இன்ஸ்டா பக்கத்தில் துஷாரா விஜயன் கூறியிருப்பதாவது:

நான்கு மாதங்களில் 69.2 கிலோ உடல் எடையிலிருந்து 56.2 கிலோ எடைக்கு மாறியுள்ளேன். இந்தப் பயணம் எடையைக் குறைப்பது மட்டுமல்ல; சாக்கு சொல்வதில் இருந்து ஒழுக்கத்தைத் தேர்ந்தெடுக்கவும் பாதுக்காப்பானதை விடவும் தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்யவும் ஒவ்வொரு நாளும் என்னை நானே நம்புவதுமாக இருந்தது.

இந்தப் பயணத்தில் உறுதுணையாக இருந்த எனது பயிற்சியாளர், நண்பர், குடும்பத்தினருக்கு நன்றி. நீங்கள் இல்லாமல் என்னால் இதைச் செய்திருக்க முடியாது.

என்னால் யாராவது ஒருவர் உத்வேகம் அடைந்து பலன்பெற்றாலும் அதுவே போதுமானது. தொடர்ச்சியான சிறிய மாற்றங்கள்தான் மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்றார்.

Summary

Dushara Vijayan Lost 13 kg of body weight in 4 months! and share tips to others

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.