ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வரலாற்றுப் புரட்சி... தந்தையின் சாதனை குறித்து ஜேசன் சஞ்சய் பெருமிதம்!

முதல்வர் விஜய்யின் வெற்றி குறித்து அவரது மகன் ஜேசன் சஞ்சய் கூறியிருப்பதாவது...

Chief Minister Vijay and his son Jason Sanjay.

முதல்வர் விஜய், அவரது மகன் ஜேசன் சஞ்சய். - படங்கள்: எக்ஸ் / டிவிகே, லைகா.

Published On :1 ஆகஸ்ட் 2026, 2:43 pm IST

முதல்வர் விஜய்யின் வெற்றி குறித்து அவரது மகன் ஜேசன் சஞ்சய் நேர்காணல் ஒன்றில் பேசும்போது, “வரலாற்றுப் புரட்சி” எனப் பெருமையாகக் கூறியுள்ளார்.

நடிகராக இருந்து தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி இரண்டறை ஆண்டுகளில் தமிழ்நாட்டின் முதல்வராக மாறியிருக்கிறார் ச. ஜோசப் விஜய். எம்ஜிஆரை விடவும் அதிகமான வாக்கு சதவிகிதத்தைப் பெற்று அசத்தினார்.

முதல்வர் விஜய்க்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும் திவ்யா என்ற மகளும் இருக்கிறார்கள். இதில் ஜேசன் சஞ்சய் இயக்குநராக சிக்மா என்ற படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார்.

லைகா புரடக்‌ஷனில் சந்தீப் கிஷன் நாயகனாக நடித்துள்ள இந்தப் படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் நேர்காணல் ஒன்றில் அவர் பேசியிருப்பதாவது:

தற்போது நடந்திருப்பது வரலாற்றுப் புரட்சி. இதில் எனக்கும் சரி, எனது தங்கைக்கும் சரி மற்றும் எனது குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் கூடுதலான பொறுப்பு வந்திருக்கிறது. அவருக்கு இருக்கும் மரபையும் காப்பாற்ற வேண்டும். அதில் கவனமுடன் நான் இருந்தாக வேண்டும். ஏனெனில் சூழ்நிலை அந்தமாதிரி இருக்கிறது.

அவர் எனக்கு அளித்த அறிவுரை நன்றாக இருந்தது. ’தனியாக உனக்கென்று ஒரு ஆளுமையை உருவாக்கு’ எனக் கூறினார். எனக்கும் அதுதான் திட்டம். ’எதாவது உதவி என்றால் நிச்சயமாக உதவுவேன். ஆனால், எல்லாவற்றையும் நீயாகத்தான் செய்ய வேண்டும். அப்போதுதான் அனுபவம் கிடைக்கும்’ எனவும் குறியது எனக்குப் பிடித்திருந்தது என்றார்.

Summary

This is historical revolutions says Jason sanjay about his father Election win

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.