மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கருவுற்று இருப்பதை வித்தியாசமான முறையில் அறிவித்த தீபிகா படுகோன்!

பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் கருவுற்று இருப்பது குறித்து...

News image

தீபிகா படுகோன், ரன்வீர் சிங்

Updated On :20 ஏப்ரல் 2026, 6:55 am

பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் தான் கருவுற்று இருப்பதை வித்தியாசமான முறையில் அறிவித்துள்ளார்.

கடந்த 2018ஆம் ஆண்டு ரன்வீர் சிங், தீபிகா படுகோன் தம்பதிக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், கடந்த 2024 ஆம் ஆண்டு இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது.

இவர்களின் மகளான துவாவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகிய நிலையில், தீபிகா படுகோன் இரண்டாவது முறையாக கருவுற்று இருப்பதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக, தீபிகா படுகோனும், அவரது கணவர் ரன்வீர் சிங்கும் சேர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த மகிழ்ச்சிச் செய்தியைப் பகிர்ந்துள்ளனர்.

அதில், தீபிகாவின் மகள் துவா, கருவுற்று இருப்பதை பரிசோதனை செய்யும் சாதனத்தை கையில் பிடித்திருக்கும் புகைப்படத்தை நடிகை தீபிகா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, ‘கண் திருஷ்டி’ எமோஜியை மட்டும் கொடுத்துள்ளார்.

இந்தப் பதிவுக்கு, பாலிவுட், கோலிவுட் திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தீபிகா - ரன்வீர் தம்பதிக்கு தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் ரன்வீர் சிங் ‘துரந்தர் 2’ வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். நடிகை தீபிகா படுகோன் அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுனுடன் இணைந்து ‘ராக்கா’ என்ற படத்தில் நடித்துவருகிறார்.

இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் மிருணாள் தாக்குர், ஜான்வி கபூர் நடிக்கின்றனர். சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

Summary

Bollywood actress Deepika Padukone has announced her pregnancy in a unique way.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.