சாய் அபயங்கரின் இசையில் உருவான ‘பவழ மல்லி’ என்ற ஆல்பத்தின் பாடல் விடியோ யூடியூப்பில் அதிவேகமாக 100 மில்லியன் (10 கோடி) பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் (21 வயது) ’கட்சி சேர’ எனும் ஆல்பத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார். இவர் பிரபல பாடகர்கள் திப்பு, ஹரிணி அவர்களின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘டியூட்’ என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். முதல் படத்திலேயே ஜென் ஸி இளைஞர்களிடமும் கவனமும் பெற்றார்.
தமிழில் வளர்ந்துவரும் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையில் தற்போது 6 திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. இதில், கருப்பு திரைப்படம் ஏப்ரல் வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளது.
இதற்கடுத்து அட்லி - அல்லு அர்ஜுனின் ராக்கா படத்திலும் இசையமைக்கவிருக்கிறார். தனது ஐந்தாவது ஆல்பம் பாடலாக ‘பவழ மல்லி’ எனப் பெயரிட்ட பாடலை கடந்த மார்ச் 5ஆம் தேதி வெளியானது.
இந்த ஆல்பத்தில் ஸ்ருதி ஹாசனுடன் இணைந்து சாய் அபயங்கர் பாடியிருந்தார். அந்தப் பாடலில் அவருக்கு ஜோடியாக நடிகை கயாடு லோஹர் நடனமாடியிருந்தார்.
மிகுந்த வரவேற்பைப் பெற்ற இந்தப் பாடல் 43 நாள்களில் 100 மில்லியன் (10 கோடி) பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இது குறித்து ’திங்க் மியூசிக் இந்தியா’ என்ற இசை நிறுவனம் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









