இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் பிரசாந்த் நடிக்க இருந்த திரைப்படம் கைவிடப்பட்டதாம்.
நடிகர் பிரசாந்த் நடிப்பில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அந்தகன், தி கோட் ஆகிய படங்களில் நடித்திருந்தார். அந்தகன் திரைப்படம் ஹிந்தியில் வெளியான ‘அந்தாதுன்’ திரைப்படத்தின் ரீமேக் என்றாலும் தமிழில் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.
தற்போது, தெலுங்கில் வெற்றிபெற்ற கோர்ட் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து முடித்துள்ளார். படத்திற்கு ரஞ்சன் எனப் பெயரிட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, இயக்குநர் ஹரியுடன் பிரசாந்த் இணையும் படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், இப்படத்திற்காக ஹரிக்கு கொடுத்த முன்பணத்தைப் பெற்றுத் தருமாறு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இயக்குநரும் பிரசாந்த்டின் தந்தையுமான தியாகராஜன் புகார் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், இக்கூட்டணி திரைப்படம் கைவிடப்பட்டதாகவே தெரிகிறது. இயக்குநர் ஹரியின் முதல் படமான ‘தமிழ்’ திரைப்படத்தில் பிரசாந்த் கதாநாயகனாக நடித்திருந்தார். கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்குப் பின் இவர்கள் மீண்டும் இணைய இருந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
reports suggests that director hari and prashanth movie has dropped
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹரி இயக்கத்தில் அதர்வா?
அறிமுக இயக்குநருடன் இணையும் ரவி மோகன்!

செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க மாட்டேன்: ஆண்ட்ரியா

கொட்டுக்காளி இயக்குநரின் புதிய படம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


