மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ரூ.167 கோடிக்கு விற்கப்பட்ட ரவி வர்மாவின் ஓவியம்..! நவீன இந்திய ஓவியத்தில் புதிய மைல்கல்!

ராஜா ரவி வர்மா வரைந்த ஓவியம் ரூ.167 கோடிக்கு விற்கப்பட்டது குறித்து...

News image

அன்னை யசோதாவுடன் குழந்தை கிருஷ்ணர் இருக்கும் ஓவியம். - படம்: பிடிஐ

Updated On :2 ஏப்ரல் 2026, 12:58 pm

உன்னதமான இந்திய ஓவியர் ராஜா ரவி வர்மாவின் எண்ணெய் வண்ண ஓவியம் (ஆயில் பெயிண்டிங்) ஒன்று ரூ.167.20 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.

ஓவியர் ரவி வர்மா 1890ல் அன்னை யசோதை உடன் குழந்தை கிருஷ்ணர் இருக்கும் இந்த ஓவியம் இந்திய வரலாற்றிலேயே அதிக தொகைக்கு விற்பனையான ’நவீன இந்திய ஓவியம்’ ஆக புதிய சாதனை படைத்துள்ளது.

ராஜா ரவி வர்மாவின் ஓவியம் ரூ. 80 - 120 கோடிக்கு விற்பனையாகுமென இதனை விலைக்கு வாங்கிய சீரம் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியாவின் மேலாண்மை இயக்குநர் டாக்டர் சைரஸ் எஸ். பூனாவாலா கூறியிருந்தார்.

மும்பையில், சஃபரான் ஆர்ட் ஸ்போர்டிங் லைக் ஆக்சன் ஏலத்தில் அன்னை யசோதை உடன் குழந்தை கிருஷ்ணர் இருக்கும் ராஜா ரவி வர்மாவின் எண்ணெய் வண்ண ஓவியம் ரூ.167.20 கோடிக்கு விற்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.

ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட நவீன இந்திய ஓவியமாக இது வரலாறு படைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, எம்.எஃப். ஹொசைன் கிராம் யாத்ரா ஓவியம் ரூ.118 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு முதலிடத்தில் இருந்தது. தற்போது, அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பூனாவாலா, “ராஜா ரவி வர்மா வரைந்த யசோதா, கிருஷ்ணாவின் ஓவியத்தை வாங்கியதற்கும் பாதுகாத்ததுக்கும் நான் மிகவும் பெருமையாகக் கருதுகிறேன். நமது நாட்டின் புதையலை பொதுமக்கள் அடிக்கடி பார்வையிட வைக்க தகுதியுடையது என நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

அன்னை யசோதாவுடன் குழந்தை கிருஷ்ணர் இருக்கும் ஓவியம்.

அன்னை யசோதாவுடன் குழந்தை கிருஷ்ணர் இருக்கும் ஓவியம். - பிடிஐ

நவீன இந்திய ஓவியம் இவ்வளவு மிகப்பெரிய தொகைக்கு விற்கப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாகவும் இந்திய ஓவிய சந்தைக்கு மதிப்பு கூட்டுவதாகவும் சஃப்ரான் நிர்வாகத்தின் துணை நிறுவனர் கூறியுள்ளார்.

Summary

Raja Ravi Varma's 'Yashoda and Krishna' sells at record-breaking Rs 167.20 crore.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.