பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் ராமாயணா படத்தில் முதலில் நடிக்க தயக்கமாக இருந்ததாகவும் குழந்தைக்குத் தந்தையான பிறகு தன்னம்பிக்கை பிறந்ததாகவும் கூறியுள்ளார். ரன்பீர் - ஆலியா பட் தம்பதிக்கு ராஹா எனும் பெண் குழந்தை நவ.6, 2022ஆம் ஆண்டு பிறந்தது.
இயக்குநர் நித்திஷ் திவாரி இயக்கத்தில் நடிகர்கள் ரன்பீர் கபூர், யஷ், நடிகை சாய் பல்லவி நடிப்பில் ராமாயணம் உருவாகி வருகிறது. இரண்டு பாகமாக உருவாகும் படத்தின் முதல் பாகத்திற்கான படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தப் படத்தில் ராமனாக ரன்பீர், சீதையாக சாய் பல்லவி, ராணவனனாக யஷ்ஷும் நடித்து வருகின்றனர். இதன் கிளிம்ஸ் விடியோ வெளியாகி ஆச்சரியப்படுத்திய நிலையில், ராமராக நடித்த ரன்பீரின் அறிமுக விடியோவை இன்று வெளியிட்டுள்ளனர்.
இப்படத்திற்கு ஆஸ்கர் வென்ற இசையமைப்பாளர்களான ஹான்ஸ் சிம்மர் மற்றும் ஏ. ஆர். ரஹ்மான் ஆகியோர் இசைமைத்து வருகிறார்கள்.
தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் இந்தப் படத்தின் ஐமேக்ஸ் டீசர் திரையீட்டு விழா நியூயார்க்கில் நடைபெற்றறது. இதில் நடிகர் ரன்பீர் கபூர் பேசியிருப்பதாவது:
நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக இந்தப் படத்திற்கான வாய்ப்பை நமீத் என்னிடம் வழங்கும்போது, என்னுடைய உடனடி எதிர்வினை நான் அந்த அளவுக்கு பொருத்தமானவன் இல்லை என்பதாகவே இருந்தது.
என்னால், முழுமையான நியாயம் சேர்க்க முடியுமென நினைக்கவில்லை. ஆனால், இந்தப் பயம் எனக்கு நன்றியுணர்வாக மாறியது. ஏனெனில், இந்த மாதிரியான வாய்ப்புகள் எனக்கு வாழ்க்கையில் தேவையாக இருந்தது.
நான் முதல்முறையாக தந்தையாக மாறினேன். அப்போது எனது வாழ்க்கையின் முறைமைகளை மாற்ற வேண்டியிருந்தது. தற்செயலாக தந்தையானதும் கடவுள் ராமராக நடித்ததும் ஒரே நேரத்தில் எனக்கு திருப்புமுனையாக அமைந்தது.
கடவுள் ராமரின் பயணம் நமக்குள் ஆழ்மனதில் மிகுந்த பெருமையையும் ஆழ்ந்த நெருக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரைப் பிரதிநிதித்துவப் படுத்தி நடிக்க, உடல் ரீதியாக மட்டுமல்லாமல் மன ரீதியாகவும் ஆன்மிக ரீதியாகவும் தயாராக வேண்டியிருந்தது. உழைப்பு சரியாக இருக்கும்பட்சத்தில், எல்லாமே சரியாக நடக்கும் என்றார்.
Summary
Becoming a father and playing Lord Ram at the same time was a sweet coincidence: Ranbir Kapoor
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொடர் தோல்விகளால் துவளும் பாகிஸ்தான்! டி20 ஓய்வு குறித்து மனம் திறந்த கேப்டன் சல்மான்!
ஒரு வினாடி சொதப்பல்... விமர்சிக்கப்படும் ராமாயணா கிளிம்ஸ்!

ராமாயணா - யஷ், சாய் பல்லவி கிளிம்ஸுக்கு காத்திருக்கும் ரசிகர்கள்!
ராமராக ரன்பீர் கபூர்... வியப்பில் ஆழ்த்தும் ராமாயணா கிளிம்ஸ்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



