ராமாயணா கிளிம்ஸ் காட்சியில் ஏற்பட்ட லாஜிக் குறைபாட்டால் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இயக்குநர் நித்திஷ் திவாரி இயக்கத்தில் நடிகர்கள் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடிப்பில் ராமாயணம் உருவாகி வருகிறது. இரண்டு பாகமாக உருவாகும் படத்தின் முதல் பாகத்திற்கான படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதில் ராமனாக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி, ராணவனாக யஷும் நடித்து வருகின்றனர். இதன் கிளிம்ஸ் விடியோ வெளியாகி ஆச்சரியப்படுத்திய நிலையில், ராமராக நடித்த ரன்பீரின் அறிமுக விடியோவை சில நாள்களுக்கு முன் வெளியிட்டனர்.
மிகப் பிரம்மாண்டமான விஎஃப்எக்ஸ் வேலைப்பாடுகள், கம்பீரமான ரன்பீர் தோற்றம், பின்னணி இசை என அனைத்தும் வியப்பில் ஆழ்த்தியுள்ளதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ராமாயணாவுக்கு உருவாகியுள்ளது.
யூடியூபில் இந்த கிளிம்ஸ் 2 கோடிக்கும் அதிகமாக பார்வைகளைப் பெற்றுள்ளது.
ஆனால், இந்த கிளிம்ஸின் 36-வது வினாடியில் ராமர் நடந்துவருவது போன்ற காட்சியின் ஆரம்பத்தில் சிறுவன் ஒருவன் தலைகுணிந்து அவரை வணங்குகிறான். ராமரான ரன்பீர் அடுத்தடுத்த அடிகளை வைக்கும்போதும் அதே சிறுவன் அவருடைய பக்கவாட்டில் நின்றுகொண்டிருப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.
இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் படமொடுப்பவர்கள் இதைக் கூட சரி செய்ய மாட்டார்களா? என சிலர் இந்த கிளிம்ஸ் குறையை விமர்சித்து வருகின்றனர்.
Summary
The Ramayana glimpse scene has drawn criticism due to a logical flaw.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இளையராஜா இசையில் உருவாகும் வால்மீகி ராமாயணா!

ராமாயணா - யஷ், சாய் பல்லவி கிளிம்ஸுக்கு காத்திருக்கும் ரசிகர்கள்!
ராமராக ரன்பீர் கபூர்... வியப்பில் ஆழ்த்தும் ராமாயணா கிளிம்ஸ்!

அனுமன் ஜெயந்திக்கு வெளியாகும் ராமாயணா பட க்ளிம்ஸ் விடியோ!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

