நல்லகண்ணு உடல்நிலை! விஜய் விசாரிப்பு!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

ஓடிடியில் வெளியான விஜய் ஆண்டனியின் சக்தித் திருமகன்!

சக்தித் திருமகன் படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக...

News image
சக்தித் திருமகனில் விஜய் ஆண்டனி... - படம்: எக்ஸ் / விஜய் ஆண்டனி.
Updated On :24 அக்டோபர் 2025, 9:01 am

இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் ஆண்டனியின் சக்தித் திருமகன் திரைப்படம் ஓடிடி தளத்தில் இன்று(அக். 24) வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் ஆண்டனியின் 25-வது படமாக உருவான சக்தித் திருமகன் படத்தை, விஜய் ஆண்டனி தயாரிக்க அருண் பிரபு எழுதி இயக்கியிருந்தார்.

இப்படம் கடந்த செப். 19 திரைக்கு வந்தது. ஊழல் செய்யும் அரசியல்வாதிகளைக் கேள்விகேட்கும் பாத்திரத்தில் விஜய் ஆண்டனி நடித்திருந்தார். கதையும் திரைக்கதையும் நன்றாக இருந்ததால் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது.

விஜய் ஆண்டனி இசையமைத்துள்ள இப்படம், வணிக ரீதியாக எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

இந்த நிலையில், சக்தித் திருமகன் திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.