டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

பகவதி மறுவெளியீட்டுத் தேதி!

மறுவெளியீடாகிறது பகவதி...

News image
Updated On :19 மார்ச் 2025, 7:38 am

DIN

நடிகர் விஜய் நடித்த பகவதி திரைப்படம் மறுவெளியீடாகத் திரைக்கு வருகிறது.

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பகவதி. இயக்குநர் ஏ. வெங்கடேஷ் இயக்கிய இப்படத்தில் உணவக உரிமையாளாரன பகவதி (விஜய்) தன் தம்பியை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைப்பார்.

ஆனால், அத்தம்பியை வில்லன் கொல்ல பிரச்னைகளைக் கண்டால் ஒதுங்கும் பகவதி, டான்னாக மாறுகிறார். பின், என்ன நடக்கிறது என்பதே படத்தின் கதை.

இப்படம் வெளியானபோது நடிகர் வடிவேலு மற்றும் விஜய்க்கு இடையேயான நகைச்சுவைக் காட்சிகள் பெரிதாக வரவேற்பைப் பெற்றன. ரூ. 4 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் வணிக ரீதியாகவும் வெற்றியைப் பெற்றது.

Story image

இப்படம் வெளியாகி 23 ஆண்டுகள் ஆன நிலையில் மீண்டும் திரையரங்குகளில் மார்ச் 21 ஆம் தேதி மறுவெளியீடு செய்வதாகத் தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.