/

ரூ. 25 கோடி வசூலித்த தலைவர் தம்பி தலைமையில்!

தலைவர் தம்பி தலைமையில் வசூல் குறித்து...

News image
Updated On :1 பிப்ரவரி 2026, 12:24 pm

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் ஜீவா நடித்த தலைவர் தம்பி தலைமையில் திரைப்படம் ரூ. 25 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.

நடிகர் ஜீவா நடிப்பில் பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வந்த திரைப்படமான தலைவர் தம்பி தலைமையில் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வெற்றிப்படமாக மாறியுள்ளது.

தோல்விப்படங்களால் மார்க்கெட் இழந்து நல்ல வாய்ப்புக்காகக் காத்திருந்த ஜீவாவுக்கு திருப்புமுனை படமாகவே இது அமைந்துள்ளது.

இந்த நிலையில், இப்படம் ரூ. 25 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இப்படம் ஹிந்தியில் ரீமேக் ஆகவுள்ளதாகத் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தெரிவித்துள்ளார். பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும்போதே இதன் ஹிந்தி ரீமேக் உரிமம் பெறப்பட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.