/

கூலி படத்தின் முதல் பாடல் அறிவிப்பு!

கூலி படத்தின் முதல் பாடல் வெளியீடு குறித்து...

News image
Updated On :23 ஜூன் 2025, 12:48 pm

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘கூலி’ படத்தின் முதல் பாடல் வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்தின் 171-வது திரைப்படமான ‘கூலி’-ஐ பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக அறிவிக்கப்பட்ட நாள் முதல் இப்படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அனிருத் ரவிச்சந்திரனின் இசையில் உருவாகி வரும் இந்தப் படத்தில் சௌபின் சாஹிர், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் பிரதான பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இதனிடையே பாலிவுட் நடிகர் அமீர் கான் இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், நடிகை பூஜா ஹெக்டே ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மிகப் பெரிய பட்ஜெட்டில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள ‘கூலி’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

முன்னதாக, இப்படத்தின் கிளிம்ஸ் விடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது.

இந்நிலையில், ‘கூலி’ படத்தின் முதல் பாடலான ’சிக்கிட்டூ’ ஜூன் 25 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.