சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புவிதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடு
/

வெளியானது விமலின் 'தேசிங்கு ராஜா 2' பட டீசர்!

விமல் நடிப்பில் 'தேசிங்கு ராஜா 2' படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

News image

விமல்

Updated On :21 ஜூன் 2025, 3:15 pm

விமல் நடிப்பில் 'தேசிங்கு ராஜா 2' படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இயக்குநர் எழில் இயக்கத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘தேசிங்கு ராஜா’. இதில் விமல் நாயகனாகவும் அவருக்கு ஜோடியாக பிந்து மாதவி நடித்திருந்தார்.

காமெடி பாணியில் உருவான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

10 ஆண்டுகளுக்கு பிறகு ‘தேசிங்கு ராஜா’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதிலும் விமல் நாயகனாக நடிக்க எழில் இயக்கி வருகிறார். படத்தில் தெலுங்கு நடிகைகள் பூஜிதா பொன்னாடா, ஹர்ஷிதா நாயகிகளாக நடிக்கிறார்கள்.

இவர்களுடன் ரவிமரியா, ரோபோ சங்கர், சிங்கம் புலி, கிங்ஸ்லி, புகழ், ராஜேந்திரன் உள்பட பலர் நடிக்கின்றனர். இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் சார்பில் பி.ரவிச்சந்திரன் தயாரிக்கிறார்.

வித்யாசாகர் இசை அமைக்கிறார். வெவ்வேறு நோக்கங்களுடன் கல்லூரியில் படிக்கும் 4 நண்பர்களை பின்னணியாகக் கொண்டு படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் படத்தின் டீசரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. படம் ஜூலை 11ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.