லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மலையாளத்தில் அறிமுகமாகும் யுவன் ஷங்கர் ராஜா!

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா குறித்து...

News image

யுவன் ஷங்கர் ராஜா. - படம்: இன்ஸ்டா / இட்ஸ்யுவன்.

Updated On :17 ஏப்ரல் 2026, 10:52 am

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா முதல்முறையாக மலையாள திரைப்படத்துக்கு இசையமைக்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் 1997ல் அரவிந்தன் திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான யுவன் ஷங்கர் ராஜா 200 திரைப்படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ளார்.

மலையாளத்தில் நடிகராக இருக்கும் ஜோஜு ஜார்ஜ் இயக்குநராக ’பனி’ என்ற தனது முதல் படத்தை 2024ல் இயக்கினார். இந்தப் படத்தின் வெற்றியைத் தொடரந்து தற்போது இரண்டாவது படத்தை எழுதி இயக்குகிறார்.

காவ்யா ப்லிம் கம்பெனி தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்திற்கு ‘பரிபாடி’ எனப் பெயரிட்டுள்ளனர். இந்தப் படத்துக்கு ராஜீவ் ரவி ஒளிப்பதிவு செய்ய, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

யுவன் ஷங்கர் ராஜா தமிழில் கடந்தாண்டு 5 திரைப்படங்களுக்கு இசையமைத்திருந்தார். தற்போது பல படங்களுக்கு இசையமத்துவரும் நிலையில், முதல்முறையாக மலையாளத்தில் அறிமுகமாகியிருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Summary

Yuvan Shankar Raja Makes His Debut in Malayalam!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.