/

ஓடிடியில் பாகுபலி சாதனையை முறியடித்த திரைப்படம்!

ஒடிய மொழியின் வெற்றிப்படம் ஓடிடியில் வெளியானது....

News image
Updated On :28 டிசம்பர் 2025, 9:24 am

இணையதளச் செய்திப் பிரிவு

அதிகம் வசூலித்த ஒடிய திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

ஒடிய மொழியில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி ஜெகதீஷ் மிஸ்ரா இயக்கத்தில் பாபூஷண் மொகந்தி, அபாரஜிதா மொகந்தி நடிப்பில், ‘போ பட்டு பூதா - bou buttu bhuta’ (அம்மா, மகன் மற்றும் பூதம்) என்கிற திரைப்படம் வெளியானது.

ஹாரர் பின்னணியில் அமானுஷ்யங்களை உள்ளடக்கிய கதையாக உருவான இப்படம், ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் ஒடிசாவில் ரூ. 18 கோடி வரை வசூலித்து ஒடிய மொழியில் அதிகம் வசூலித்த திரைப்படமானது.

இதற்கு முன், அங்கு பாகுபலி, ஜவான் ஆகிய படங்கள் ஓரளவு வணிகம் செய்திருந்தது. ஆனால், மீண்டும் மீண்டும் ரசிகர்கள் போ பட்டு பூதா படத்தைப் பார்த்ததால் மிகப் பெரிய வணிக வெற்றியை அடைந்தது.

Story image

இந்த நிலையில், இப்படம் ஏஏஓ என்எக்ஸ்டி (aao NXT) ஓடிடியில் வெளியாகி ரசிகர்களால் பார்க்கப்பட்டு கவனம்பெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.