/

ஓடிடியில் நேரடியாக வெளியான ஜிவி பிரகாஷின் லக்கி திரைப்படம்!

ஜிவி பிரகாஷின் லக்கி திரைப்படம் வெளியானது தொடர்பாக...

News image
Updated On :20 பிப்ரவரி 2026, 4:56 am

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் ஜிவி பிரகாஷ் நடித்த லக்கி திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் நாயகியாக அனஸ்வரா ராஜனும் முக்கிய கதாபாத்திரங்களில் கோவை சரளா, மொட்டை ராஜேந்திரன், தம்பி ராமைய்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

அரசியல்வாதிகளிடம் சிக்கிக்கொள்ளும் வளர்ப்பு நாயை, கதாநாயகன் எப்படி காப்பாற்றுகிறார் என்பதை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

உதய் மகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தை, கந்தசாமி மற்றும் புஷ்பா கந்தசாமி ஆகியோர் தயாரித்துள்ளனர்.

இந்தத் திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் நேரடியாக வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

லக்கி திரைப்படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் பார்க்கலாம்.

summary

The movie Lucky, starring actor GV Prakash, has been released directly on the OTT platform.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.