நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

பீனிக்ஸ் - வீழான் படத்தின் முக்கிய அறிவிப்பு!

பீனிக்ஸ் - வீழான் படத்தின் அறிவிப்பு தொடர்பாக....

News image
Updated On :24 ஏப்ரல் 2025, 1:53 pm

DIN

நடிகர் விஜய் சேதுபதியின் மகன் அறிமுகமாகும் பீனிக்ஸ் - வீழான் படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் விஜய் சேதுபதி, மகாராஜா திரைபடத்தில் நடித்து மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தார். தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

அவருடைய மகன் சூர்யா விஜய் சேதுபதி சண்டைப் பயிற்சியாளர் அனல் அரசு இயக்கத்தில்  ‘பீனிக்ஸ் - வீழான்’ திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமாகவுள்ளார்.

Story image

இப்படத்திலிருந்து சூர்யா சேதுபதி என்கிற பெயரில் திரைத்துறைக்கு வருகிறார். இப்படத்தின் முதல் பாடலான ’யாராண்ட’ பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது.

கடந்த நவ.14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்த இப்படம், தணிக்கைச் சான்றிதழ் பிரச்னைகளால் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், பீனிக்ஸ் - வீழான் படத்தின் முக்கிய அறிவிப்பு நாளை(ஏப். 25) மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.