தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

அருண் விஜய்யின் ‘ரெட்ட தல’ விருந்து!

நடிகர் அருண் விஜய் ரெட்ட தல குழுவினருக்கு விருந்தளித்துள்ளார்.

News image
Updated On :1 அக்டோபர் 2024, 2:06 pm

DIN

நடிகர் அருண் விஜய் ரெட்ட தல குழுவினருக்கு விருந்தளித்துள்ளார்.

அருண் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான மிஷன் சேப்டர்-1 திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் வசூலில் வெற்றியடைந்தது.

அடுத்ததாக, பாலா இயக்கத்தில் இவர் நடித்துள்ள வணங்கான் படத்தில் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

தொடர்ந்து, அருண் விஜய்யின் 36 படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப். 4 ஆம் தேதி பூஜையுடன் தொடங்கியது. கிரிஸ் திருக்குமரன் இயக்கும் இப்படத்திற்கு, ’ரெட்ட தல’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

சாம் சிஎஸ் இசையமைக்கும் இப்படத்தில் சித்தி இத்னானி, தன்யா, பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ் ஆகியோர் பிரதான வேடங்களில் நடிக்கிறார்கள்.

படத்தின் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்ற நிலையில், இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கோவாவில் துவங்கியுள்ளது. தொடர்ந்து, நடிகர் அருண் விஜய் படக்குழுவினருக்கு அசைவ விருந்தளித்துள்ளார். இதனை, நடிகை சித்தி இத்னானி பகிர்ந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.