அஜித்திடம் நலம் விசாரித்த விஜய்!
நடிகர் அஜித் குமார் மருத்துவமனைவில் இருந்தபோது நடிகர் விஜய் நலம் விசாரித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.


துணிவு படத்தின் வெற்றிக்குப் பின் நடிகர் அஜித் குமார் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று முடிந்தது.
அடுத்தக்கட்ட படப்பிடிப்பும் வெளிநாட்டில் நிகழ உள்ளது. இதனிடையே நடிகர் அஜித் குமார் இரு நாள்கள் முன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நரம்பு பிரச்னைக்காக அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
தொடர்ந்து, சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு மருத்துவமனையில் இருந்து அஜித் குமார் வீடு திரும்பியுள்ளார்.
இதற்கிடையே, நடிகர் அஜித் மருத்துவமனையில் இருந்தபோது நடிகர் விஜய் தொலைப்பேசி வாயிலாக அஜித்தைத் தொடர்புகொண்டு அவரின் உடல் நலம் பற்றி விசாரித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...