டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

எச். ராஜாவைச் சந்தித்து நலம் விசாரித்த இபிஎஸ்!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எச். ராஜாவைச் சந்தித்து நலம் விசாரித்த எடப்பாடி பழனிசாமி...

News image
கோப்புப் படம்
Updated On :4 பிப்ரவரி 2026, 10:03 am

இணையதளச் செய்திப் பிரிவு

உடல்நலக் குறைவுக் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாஜக மூத்த தலைவர் எச். ராஜாவை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

பாஜக மூத்த தலைவரும் கட்சியின் தேசியக் குழு உறுப்பினருமான எச். ராஜா (68) கடந்த ஜன. 30 அன்று சென்னை கிண்டியில் தனியாா் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது திடீரென்று மயங்கி விழுந்தாா். உடனடியாக அவா் அருகில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

அங்கு அவருக்கு முதல்கட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. பின்னா், அவா் மேல் சிகிச்சைக்காக சென்னை ஆயிரம் விளக்கு பகுதி கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். மூளை ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டிருந்ததால் அவருக்கு மருத்துவா்கள் தீவிர சிகிச்சை அளித்தனா்.

தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள அவரை அரசியல் தலைவர்கள் பலரும் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் எச். ராஜாவை நேரில் சந்தித்து அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார்.

அதிமுகவின் வேலுமணி, கே.பி. முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், விஜயபாஸ்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.